தனது மகளை சந்தோஷமாகப் பாத்துக்கொள்ளும் மருமகனுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், 10 ஆடுகள், ஆயிரம்கிலோ மீன், 250 கிலோ இறாலுடன் மாமனார் சீர் அளித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆடிச்சீர்
புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கமாகும். இதன்படி ஆடிமாதத்தில், பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்கு அழைத்து வந்து, புத்தாடை, பொன் நகை, வழங்கி, அசைவ உணவுகளை சமைத்துப் போட்டு விருந்து படைப்பார்கள். மாப்பிள்ளைக்கு ஆடிச்சீர் கொடுத்து அனுப்புவதும் வழக்கத்தில் உள்ளது.
ஆஷாதம் விழா (Ashadam Festival)
இதேபோல தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.
அந்தவகையில் புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான முறையில் சீர் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். அந்த சீர் என்ன தெரியுமா?
அசத்தல் சீர் (Asathal Seer)
ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் வைத்தார். இதை அப்பகுதி மக்கள் மிகுந்த வியந்து போனார்கள். .
மகிழ்ச்சி வெளிப்படுத்த சீர் (Tune in to express happiness)
இதுகுறித்து பலராமகிருஷ்ணா கூறும்போது, தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது. தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக்கொள்வதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த சீர்வரிசையை வழங்கியதாத் தெரிவித்தார்.
சீராக ஆடுகள் (Goats evenly)
திருமணமாகிச் செல்லும் பெண்பிள்ளைகளுக்கு ஆடுகளை சீராகப் கொடுக்கும் வழக்கமும் தமிழிர்களிடையே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
மகன் மத்திய அமைச்சர்- தந்தை விவசாயி!
ஆன்லைன் வகுப்புக்காக அல்லாடும் மாணவர்கள் - குடிநீர் தொட்டி மீது ஏறி பங்கேற்கும் கொடுமை!
Share your comments