நைஜீரியாவில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டுள்ளன.
நன்கொடைத் தடுப்பூசிகள் (Donate vaccines)
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நைஜீரியாவுக்கு கொரோனா தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையிலும், அங்குப் போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மண்ணில் புதைத்து அழிப்பு (Destruction buried in the soil)
இந்நிலையில், வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரிய அரசு அழித்துள்ளது. அவை காலாவதியானதால் 10 லட்சத்து 66 ஆயிரத்து 214 கோரோனா தடுப்பூசி டோஸ்களை மண்ணில் புதைத்து அழித்துள்ளதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.
காலாவதியான தடுப்பூசிகள் (Expired vaccines)
ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய ஊசி, இங்கு காலாவதியாகியுள்ளது. இது மட்டுமல்ல, பிற நாடுகள் நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஓரிரு வாரத்தில் காலாவதியாகும் சூழ்நிலையில் உள்ளன.
நைஜீரியாவில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்மறை தகவல்கள் பரவியதால் தடுப்பூசி மீது மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
10 லட்சம் (10 lakhs)
இதனால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை செலுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில் கையிருப்பில் இருந்த 10 லட்சம் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் காலாவதியானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்தனர்.
மேலும் படிக்க...
ஓமிக்ரான் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்: WHO எச்சரிக்கை!
Share your comments