இல்லரசிகளுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது இந்த மாநில அரசு. அதாவது ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம் என்பதுதான் அந்த அசத்தல் அறிவிப்பு.
பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிலிண்டரே வாங்க வேண்டாம் என்ற நிலைக்கு நிறையப் பேர் வந்துவிட்டனர். இந்நிலையில் இலவச சிலிண்டர் உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஹோலி பண்டிகையன்று உங்களுக்கு 2 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
யாருக்கு கிடைக்கும்?
அரசின் இந்த இலவச சிலிண்டர் அனைவருக்கும் இல்லை. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசாங்கம் இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அதற்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச சிலிண்டர் சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அரசு பரிசீலனை
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசிடமிருந்து இந்த பரிசு கிடைக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை, இலவச காஸ் சிலிண்டர்களை வழங்குவதற்கான பரிந்துரையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு, அரசிடமிருந்து பட்ஜெட் ஒதுக்கப்பட்ட பிறகு இலவச கேஸ் சிலிண்டர் விநியோகம் துவங்கும்.
விரைவில் பரிசு
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜேபி அரசு தயாராகி வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த முறை ஹோலி பண்டிகையன்று பொதுமக்களுக்கு ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். மேலும் தீபாவளியன்று இரண்டாவது இலவச சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதல் செலவு
மாநில அரசின் இந்த இலவச சிலிண்டர் வசதியின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.65 கோடி பயனாளிகள் பயன்பெறுவார்கள். இலவச சிலிண்டருக்கு அரசுக்கு சுமார் 3000 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்பதைச் சொல்கிறோம்.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments