திருவண்ணாமலையில் நடந்த ஏலத்தில், 2 முட்டைகள் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாயின. இதனை பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுக்க முன்வந்தனர். ஏனெனில், அவ்விரு முட்டைகள் அம்மன் கண்களில் வைக்கப்பட்ட என்பதே இதற்குக் காரணம்.
திருவண்ணாமலை மாவட்டம், ரெட்டிப்பாளையத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், கிராம மந்தைவெளியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதன் பிறகு, அம்மன் கண்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முட்டைகள் பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன.அவற்றை, குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், அந்த முட்டைகளை அதிக விலை கொடுத்து பக்தர்கள் ஏலத்தில் எடுப்பது வழக்கம்.
ரூ.15,000
இதன்படி, ஏலம் விடப்பட்ட முதல் முட்டையை, 15 ஆயிரம் ரூபாய்க்கு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கினார்.
அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், மற்றொரு முட்டையை, 2,000 ரூபாய்க்கு வாங்கினார். இரண்டு முட்டைகளும், 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க...
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
Share your comments