எஸ்பிஐ வங்கியில் ஜன்-தன் கணக்கு (SBI Jan Dhan) வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐயின் ஜன்-தன் ரூபே கார்டுக்கு (RuPay Card) விண்ணப்பித்தால் 2 லட்சம் வரையான விபத்து காப்பீட்டுத் தொகைபெறலாம்.
விபத்து காப்பீட்டுத் தொகை
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), அதன் வங்கியில் ஜன்-தன் கணக்கு வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐயின் ஜன்-தன் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் 2 லட்சம் வரையான விபத்து காப்பீட்டுத் தொகை (Accidentall insurance amount) பெறலாம் என அறிவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்) கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. பி.எம்.ஜே.டி.ஒய் என்பது நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான ஒரு தேசிய பணியாகும். இதில் வங்கி சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவையும் உள்ளடங்கும். பி.எம்.ஜே.டி.ஒய் கணக்குகளுக்கு சராசரி மாத நிலுவைத் தொகையை பராமரிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஜன்-தன் கணக்கை யாரெல்லாம் துவங்கலாம்?
10 வயது நிரம்பிய எந்தவொரு இந்திய குடிமகனும் ஜன்-தன் கணக்கைத் துவங்கலாம். உங்கள் அடிப்படை சேமிப்புக் கணக்கையும் ஜன்-தன் யோஜனா கணக்கிற்கு மாற்றலாம்.
தேவையான ஆவணங்கள்
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு துவங்க ஆதார் அட்டை (Aadhar Card) அல்லது ஆதார் எண் அல்லது ஆதார் வைத்திருந்ததற்கான ஆதாரம் இருந்தால் போதுமானது. ஆதாரில் முகவரி மாறியிருந்தால், தற்போதைய முகவரியின் சுய சான்றிதழ் போதுமானது. ஆதார் அட்டை இல்லை என்றால், பின்வரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒன்று தேவைப்படும்.
- வாக்காளர் அடையாள அட்டை (Voter id)
- ஓட்டுநர் உரிமம் (Driving License)
- பாஸ்போர்ட் மற்றும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை.
இந்த ஆவணங்களில் உங்கள் முகவரியும் இருந்தால், அது “அடையாள மற்றும் முகவரியின் சான்று” என இரண்டாகவும் செயல்படும்.
ஆவணங்கள்:
- மத்திய / மாநில அரசு துறைகள், சட்டரீதியான / ஒழுங்குமுறை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் பொது நிதி நிறுவனங்கள் வழங்கிய விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
- ஒரு வர்த்தமானி அதிகாரி வழங்கிய கடிதம், அந்த நபருக்கு முறையாக சான்றளிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடியதாக இருத்தல் வேண்டும்.
சிறப்பு அம்சங்கள்
- பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு துவங்குபவர்களுக்கு வைப்பு மீதான வட்டி கிடைக்கும்.
- இந்த கணக்கில் காப்பீட்டுத் தொகை (Insurance) ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது (புதிய கணக்குகளுக்கு ரூ. 2 லட்சம் வரை).
- இந்த கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை.
- இந்த கணக்குக்கு மூலம் இந்தியா முழுவதும் எளிதாக பணம் பரிமாற்றம் (Money transfer) செய்து கொள்ளலாம்.
- அரசு திட்டங்களின் பயனாளிகள் இந்த கணக்குகளில் நேரடி பரிமாற்றத்தைப் பெறுவார்கள்.
- 6 மாதங்களுக்கு கணக்கின் திருப்திகரமான செயல்பாட்டிற்குப் பிறகு, தகுதிக்கான அளவுகோல்களுக்கு உட்பட்டு ஓவர் டிராஃப்ட் செய்து கொள்ளும் வசதி அனுமதிக்கப்படும்.
- இந்த கணக்கின் மூலம் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளுக்கான அணுகலை பெறலாம்.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய்) இன் கீழ் மொத்தம் 41.75 கோடி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதில் 35.96 கோடி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளது எனவும் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சாலையோர வியாபாரிகளுக்கான கடன் ரூ.10 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும் - அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன்
மூத்த குடிமக்களுக்கு ஓர் நற்செய்தி! FD வட்டிச் சலுகை நீட்டிப்பு!
Share your comments