தமிழக அரசில் காலியாக உள்ள உதவி புள்ளியியல் புலனாய்வாளர் உள்ளிட்டப் பணிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசு வேலை
அரசு வேலை என்பது நம்மில் பலரது ஆசை. ஆனால் அதற்காக நம்மைத் தயார் படுத்திக்கொண்டு, முழு முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டால் வெற்றி கிடைப்பது நிச்சயம். அந்த வகையில், உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator)
கல்வித் தகுதி (Educational Qualification)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Degree in Mathematics /Computer Science / Economics/ Computer Applications with Statistics முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 20,600 – 75,900
புள்ளியியல் தொகுப்பாளர் (Statistical Compiler)
கல்வித் தகுதி (Educational Qualification)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 19,500 – ரூ.71,900
வயதுத் தகுதி (Age Limit)
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை (Selection)
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்
ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் TNPSCயின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
14.10.2022
மேலும் படிக்க...
Share your comments