தமிழகத்தின் பால் நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட முப்பது பதவிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் என்ற ஆவின் (Aavin) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Junior Executive மற்றும் Senior Factory Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மொத்த காலியிடங்கள்: 30
பணி(Job)
Manager - 03
Manager (Finance) - 01
Manager (Marketing) - 01
Deputy Manager (Dairying) - 02
Deputy Manager (Dairy Chemist) - 01
Deputy Manager (Systems) - 01
Extension officer Gr-II - 02
Executive (Office) - 09
Executive (Lab) - 01
Junior Executive (Office) - 03
Private secretary Gr -III - 01
வயது வரம்பு(Age Limit)
01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை.
பணி (Job)
Factory Assistant - 05
வயது வரம்பு (Age Limit)
01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி (Education Qualification)
சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், பால் அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், பால் அறிவியல்,பால் வேதியியல், வேதியியல், உயிர் வேதியியல்,உயிர் - தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (Fees)
ரூ.250. கட்டணத்தை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ Tirupur என்ற பெயருக்கு வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யுப்படும் முறை(Selection)
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி (How to Apply)
www.aavinmilk.com. என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி(Postal Address)
The General Manager,
Tirupur District Cooperative Milk Producers Union Ltd.,
Veerapandy pirivu,
Palladam road,
Tirupur - 641 605
கடைசி தேதி(Last Date)
05.01.2021மேலும் படிக்க...
லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!
கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்- அசத்தலான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்!
குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!
Share your comments