1. Blogs

நீங்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியா? கிராம உதவியாளராகலாம் உங்களுக்கான வாய்ப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளர் பணியிடங்களை வட்டம் வாரியாக நிரப்பிட விண்ணப்பதாரர்களிடமிருந்து பின்வரும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி

கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள்

மொத்தம் - 60

கல்வித்தகுதி

ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

01: 07:2020 அன்று குறைந்தபட்ச வயது 21 இருக்க வேண்டும். 

அதிகபட்ச வயது வரம்பு

பொதுப்பிரிவினர் (OC)- 30 வயது

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 35 வயது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

20:11:2020 மாலை 5 மணி வரை

இனச்சுழற்சி அடிப்படையில் வட்டம் வாரியாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. காலிப்பணியிணங்கள் குறித்து விரிவான விவரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Click to know more

விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களின் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் 

நிபந்தனைகள்

  • மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராம வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

  • வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும்

மேலும் படிக்க..

வெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம்! இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா?

விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

சோளப் பயிர்களை தாக்கும் பச்சை வண்ண வெட்டுக்கிளிகள்! - திண்டுக்கல் விவசாயிகள் கவலை!

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

English Summary: 60 Job vacancies announced for Village assistant in Sivagangai District , apply soon Published on: 05 November 2020, 03:50 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.