சென்னை வண்டலூரில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில், 9 சிங்கங்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus)
சீனாவில் உருவாகி உலக நாடுகளில் சாவுகாசமாக வலம் வந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லட்சக்கணக்கானவர்களுக்கு மரணத்தைப் பரிசாகத் தந்திருக்கிறதுக் கொரோனா வைரஸ்.
கோரத்தாண்டவம்
இந்த வைரஸ்ஸின் கோராத்தாண்டவம் இந்தியாவின் பல நாடுகளைப் பதம் பார்த்த வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிகப்படுவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
விலங்குகள்(Animals)
மனிதர்கள் மட்டுமல்ல, தற்போது வாயில்லா ஜீவன்களான விலங்குகளையும் இந்தக் கொலைகாரக் கொரோனா விட்டுவைக்கவில்லை.
பல விலங்குகள் (Many animals)
தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கால வரையறையின்றி மூடல் (Closing indefinitely)
கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில், பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உயிரியல் பூங்கா (Zoo)
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் சிங்கங்களில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் திடீரென உயிரிழந்துள்ளது. மருத்துவ ஆய்வுகளில் அது, சளி மற்றும் பசியின்மையால் பாதிக்கப்பட்டிருந்ததும், கொரோனா வைரஸ் தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவப் பரிசோதனை (Medical examination)
இதன் அடிப்படையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மற்ற 11 சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
9 சிங்கங்களுக்குக் கொரோனா (Corona for 9 lions
இதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிங்கங்களிடம் இருந்து, மற்ற சிங்கங்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
Share your comments