கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா - ஆயிஷா தம்பதியின் குழந்தை ஜூஹா ஜைனப். ஒரு வயது பெண் குழந்தை. முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு எனும் அரியவகை நோயால், அந்த குழந்தை பாதிக்கப்பட்டது. எனவே அந்த குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.18 கோடி மதிப்பிலான ஊசி தேவைப்பட்டது.
இலவச ஊசி
மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் நிதி உதவிக்காக ஜூஹாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். மேலும் டெல்லியில் குழந்தையுடன் பெற்றோர் பல மாதங்களாக காத்திருந்தனர். இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 'டர்பைன்' மருந்து விற்பனை மையத்தின் மூலம் குலுக்கல் முறையில் ஜூஹாவிற்கு இலவசமாக (Free) அந்த ஊசி கிடைத்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தைகளுக்கு இது போன்ற நோய்கள் வருவதைத் தடுக்க ஊட்டுச்சத்து நிறைந்த சத்தான உணவுகளை அதிகமாக வழங்க வேண்டும்.
நன்றி
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ஜூஹாவிற்கு ரூ.18 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட் டது. இதற்காக உதவிய டர்பைன் நிறுவனம் (Turbine Company) மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வந்த அனைத்து தரப்பினருக்கும் ஜூஹாவின் பெற்றோர் நன்றியும், பாராட்டையும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து
Share your comments