ஆசிரியர் பணி அறப்பணி என்று கூறுவார்கள். ஏனெனில் ஆசிரியர்கள்தான் நம் எதிர்கால சந்ததியை சொதுக்கும் சிற்பியாகச் செயல்படுகின்றனர்.
அந்த வகையில், பீஹார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்க தன் மனசாட்சி அனுமதிக்கவில்லை எனக்கூறி தன்னுடைய 33 மாத சம்பளமான ரூ.24 லட்சத்தை திருப்பி அளித்துள்ளார்.
வேலை பார்த்துவரும் பலரும் சம்பளம் வந்தால் போதும் என்று எண்ணுவர். வெகு சிலரே, வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாகவும், நியாயமாகவும் பணியாற்றுவர்.
உதவிப் பேராசிரியர்
அப்படி, பீஹாரில் ஆசிரியர் ஒருவர், தான் சரியாக பாடம் எடுக்கவில்லை எனக்கூறி தனது மூன்று ஆண்டு சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார். பீஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிந்தி உதவிப் பேராசிரியராக கடந்த 2019 செப்டம்பர் முதல் பணியாற்றியவர் லாலன் குமார்.
ரூ.23 லட்சம்
இக்கல்லூரி, பி.ஆர்.அம்பேத்கர் பீஹார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாலன் குமார் பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை கிட்டத்தட்ட ரூ.24 லட்சம் சம்பளமாக பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் தான் பெற்ற சம்பளமான ரூ.23,82,228க்கான காசோலையை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதத்துடன் திருப்பி அளித்துள்ளார்.
இது தொடர்பாக லாலன் குமார் கூறுகையில், மாணவர்களுக்கு சரியாக பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளின்போதும், ஹிந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். என்னுடைய எண்ணம் சிறப்பாக இருந்த போதிலும், என்னால் என் கடமைகளை சரிவர ஆற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மனசாட்சியுடன்
இந்த சூழ்நிலையில், சம்பளத்தை ஏற்றுக்கொள்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனசாட்சி அனுமதிக்காமல் தன் சம்பளத்தை திருப்பி அளித்த ஆசிரியருக்கு பலரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் படிக்க...
Share your comments