நீங்களும் ஒரு தொழிலைத் தொடங்க திட்டமிட்டு, சிறிய முதலீடுகளில் மாதந்தோறும் பெரிய அளவில் சம்பாதிக்க விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான். பால் பொருட்கள் விற்பனையில் பிரபல நிறுவனமான அமுல் நிறுவனத்துடன் வியாபாரம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அமுல் நிறுவனத்தின் லைசன்ஸ் எடுத்து நீங்கள் தொழில் செய்யலாம். அமுலின் உரிமத்தை (லைசன்ஸ்) எடுப்பது மிகவும் எளிதானது. ஆனால், அதைப் பற்றிய முழுமையான தகவல்களை முதலில் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
அமுல் பால் தொழில் (Amul Milk Business)
அமுல் பால் தொழிலில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ட முடியும். அமுல் தயாரிப்புகளின் குறைந்தபட்ச விற்பனை விலையில் (எம்ஆர்பி) ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனம் கமிஷன் வழங்குகிறது. ஒரு பால் பாக்கெட்டில் 2.5 சதவீதமும், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும், ஐஸ்கிரீமுக்கு 20 சதவீதமும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
அமுல் ஐஸ்கிரீம் பார்லரின் (விற்பனை மையம்) உரிமையை எடுத்துக்கொள்வதில் செய்முறை அடிப்படையிலான ஐஸ்கிரீம், ஷேக், பீட்சா, சாண்ட்விச், ஹாட் சாக்லேட் பானம் ஆகியவற்றில் 50 சதவீத கமிஷன் கிடைக்கிறது. அதே நேரத்தில்,பேக் செய்யப்பட்ட ஐஸ்கிரீமுக்கு 20 சதவீத கமிஷனையும், அமுல் தயாரிப்புகளுக்கு 10 சதவீதத்தையும் வழங்குகிறது.
அமுல் அவுட்லெட் உரிமம் (Amul Outlet Licence)
நீங்கள் அமுல் அவுட்லெட் உரிமையை எடுக்க உங்களிடம் 150 சதுர அடி இடம் இருக்க வேண்டும். உங்களிடம் போதுமான இடம் இருந்தால், அமுல் நிறுவனம் உங்களுக்கு உரிமையை வழங்கும். இருப்பினும், அமுல் ஐஸ்கிரீம் பார்லரின் உரிமையாளருக்கு குறைந்தபட்சம் 300 சதுர அடி இடம் இருக்க வேண்டும். உங்களிடம் அவ்வளவு இடம் இல்லையென்றால், அமுல் உரிமையை வழங்காது.
நீங்கள் அமுல் ஐஸ்கிரீம் பார்லரை நடத்த, சுமார் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதே சமயம் பிராண்ட் செக்யூரிட்டியாக ரூ.50,000, சீரமைப்புக்கு ரூ.4 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.1.50 லட்சம் செலவு செய்ய வேண்டும்.
நீங்கள் அமுல் அவுட்லெட், அமுல் ரயில்வே பார்லர் அல்லது அமுல் கியோஸ்க் ஆகியவற்றின் உரிமையை எடுக்க விரும்பினால், நீங்கள் அதில் சுமார் ரூ.2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில், திரும்பப் பெறாத பிராண்ட் செக்யூரிட்டியாக ரூ.25,000, சீரமைப்புக்கு ரூ.1 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.75,000 செலவாகிறது. இதுகுறித்த மேலும் தகவலுக்கு, நீங்கள் அதன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.
மேலும் படிக்க
இந்த ஊர்ல தான் பால் விலை குறைவு: தெரிந்து கொள்ளுங்கள்!
பலாப்பழ ஐஸ்கிரீம் உள்பட 10 விதமான பால் பொருட்கள்: அறிமுகம் செய்தது ஆவின்!
Share your comments