மனைவியுடன் தினமும் ஏற்படும் சண்டையால், மனம் உடைந்த இளைஞர் ஒருவர், பனைமரத்தில் குடியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியிடம் அடி தாங்க முடியாததால், இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். இவருக்கும், மனைவிக்கும் தினம் தினம் சண்டை ஏற்படுவது வழக்கம். மனைவிக்கு கோபம் தலைக்கேறினால் கடுமையாகத் தாக்கிவிடுவார்.
குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ்ஷிற்குக் காலம் செல்லச் செல்ல அடி தாங்க முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த அவர் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பை கட்டி வாழ்ந்து வருகிறார்.
கயிற்றில் உணவு
பனை மர வீட்டில் அவர் இருக்கும் சமயத்தில் அவரது குடும்பத்தினர் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகிறாகள். சுமார் ஒரு மாதமாக இவ்வாறு அவர் பனைமரத்தில் வாழ்ந்து வருகிறார்.
போலீஸூக்குத் தகவல்
பிரவேஷை மரத்தில் இருந்து கீழே இறங்கும்படி கிராம மக்கள் வற்புறுத்திய போதிலும் அவர் இறங்கவில்லை. இறங்கும்படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்துள்ளார். இதனால், கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோ எடுத்தனர். இந்த பிரச்சினை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments