1. Blogs

15 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிக்கு சிலை!!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
A statue for the farmer at the cost of 15 lakh rupees!

வாழ்க்கையில் எத்தனைதான் உறவு வந்தாலும், தந்தை என்கிற உறவுக்கு நிகர் அவர் மட்டுமே. மற்ற யாராலும் ஈடு செய்யமுடியாத இறைவன் தந்த வரம்தான் அப்பா என்கிற உறவு. அப்படிப்பட்ட தந்தையை இழந்த பிறகு, நாம் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும், தந்தையின் பாசத்தை நமக்கு வெளிப்படுத்தும்.

அந்த வகையில், தங்கள் தந்தை மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்த, இந்த மகன்கள், சுமார் ரூ.15 லட்சம் ரூபாய் செலவில், விவசாயியான தங்கள் தந்தைக்கு சிலை வைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள், தாயின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அமைதியான வாழ்க்கை

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள கொம்புக்காரன் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. விவசாயி. இவரது மனைவி பிச்சையம்மாள். இவர்களுக்கு பெரிய ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தோட்டத்து வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

திடீர் மரணம்

கடந்த ஆண்டு ராமு திடீரென உயிரிழந்தார். அந்த குடும்பத்திற்கே ஆணி வேராக இருந்த தனது கணவரின் இறப்பு மனைவி பிச்சையம்மாளுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது. தான் வாழும் வரையிலும் தனக்கு பிறகும் தனது கணவர் இதே இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தனது மகன்களிடம் தெரிவித்தார்.

தாயின் ஆசை

தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன்கள் 2 பேரும் கொம்புக்காரன்புலியூர்-மேலப்பட்டி செல்லும் சாலை அருகே தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் விவசாயி ராமுவுக்கு வெண்கல சிலை அமைத்தனர்.

சிலை திறப்பு 

இந்த சிலை திறப்பு விழா உறவினர் புடைசூழ நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராம மக்களும் கலந்து கொண்டனர். கணவரின் உருவ சிலையை கண்ட பிச்சையம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனைத் தொடர்ந்து இந்த தோட்டத்தையே கணவர் கோவிலாக மாற்றி தினமும் வழிபட போவதாக பிச்சையம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க...

தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

English Summary: A statue for the farmer at the cost of 15 lakh rupees! Published on: 20 July 2022, 08:14 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.