சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு நாளில், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் குறைந்த வந்த தங்கத்தின் விலையில் தற்போது அதிரடி மாற்றம் காணப்படுகிறது.
போர்
உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 150 நாட்களைக் கடந்துள்ளநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.
ரூ.504
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, தங்கத்தின் விலை நேற்று திடீரென அதிகரித்துள்ளது. ஒரேநாளில் கிராமுக்கு 63 ரூபாய் வீதம், சவரனுக்கு ரூ.506 ஆக அதிகரித்து, ஒரு கிராமம் 4,865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 38,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதேவிலை தொடர்கிறது.
27 தேதி
முன்னதாக கடந்த 27-ந்தேதி ஒரு சவரன் தங்கம், 37,880ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,735ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமண சீசன்
அடுத்து வரும் ஆவணி, மாதம் திருமண சீசன் என்பதால், திருமணத்தை வைத்திருப்பவர்களுக்கு இந்த அதிரடி விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments