பெற்றோரை இழந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரணிதாவிற்கு நம்பிக்கையும், ஆறுதலையும் வழங்கியது மாடித்தோட்டம். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செடிகளை பராமரிக்க நேரம் செலவிடும் தெலுங்கானா மாநிலம் பிரணிதாவின் கதை இது.
கோவிட் -19 காரணமாக ஆறு மாத கால இடைவெளியில் பிரணிதாவின் தந்தை மற்றும் தாய் இருவரும் இறந்தது அவருக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. இதனைக்கண்ட அவரது நண்பர்களும், நலம் விரும்பிகளும் மாடித் தோட்டம் அமைக்குமாறும் அதில் கவனத்தை திசை திருப்புமாறும் அறிவுறுத்தினர்.
சந்தோஷ் நகரில் வசிக்கும் வெச்சா பிரணிதா, தனது கணவர் முரளியின் ஆதரவுடன் மொட்டை மாடியில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடத் தொடங்கினார். தற்போது தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் செடிகளைப் பராமரித்து வருகிறார். மேலும் தன் குடும்பம் ரசாயனம் இல்லாத காய்கறிகளை உண்பதை உறுதி செய்வதாக நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், மன அழுத்தமில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாக குறிப்பிடுகிறார்.
40 வகையான தாவரங்கள்:
அம்மாவுக்கு ஐந்து செடிகளை பரிசளித்து தோட்டத்தில் விதைகளை விதைத்தவர் அவரது மகன் பிரதம். இப்போது, பிரணிதாவின் தோட்டத்தில் பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என விளையும் 300 செடிகள் உள்ளன. "நாங்கள் சுமார் 40 வகையான பழங்கள் மற்றும் காய்கறி செடிகளை பயிரிட்டு வருகிறோம், அதில் பேஷன் பழம், ஸ்டார்ட் ஃப்ரூட், அஞ்சீர் மற்றும் டிராகன் பழம் போன்ற சில கவர்ச்சியான தாவரங்களும் அடங்கும்" என்று தன் தோட்டத்தில் வளரும் செடிகளை குறித்து ப்ரணிதா விளக்குகிறார்.
ப்ரணிதா தனது அன்றாட குடும்பத் தேவைகள் மற்றும் அண்டை வீட்டாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலைக் காய்கறிகளைத் தவிர தக்காளி, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை ஏராளமாகப் வளர்த்து வருகிறார்.
மாடித்தோட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆலோசனை:
செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக, பசுவின் சாணம், கோமியம் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகளை தான் உரமாக பயன்படுத்துவதாக பிரணிதா கூறுகிறார். மாடித்தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள மற்றவர்களுக்கு உதவ, தம்பதியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் குழுவை துவக்கியுள்ளனர்.
தங்கள் மொட்டை மாடியில் செடிகளை வளர்ப்பதற்கான உதவிக் குறிப்புகளை வழங்குகின்றன. கடந்த ஒரு வருடமாக காய்கறிகள் வாங்குவதில்லை என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அந்த இல்லத்தரசி.
அவர்களின் வீடு தினமும் காலையில் கூரைத் தோட்டத்தில் திரளும் பறவைகளின் இனிமையான ஓசைகளால் எதிரொலிக்கிறது. "ஒவ்வொரு நாளும் காலையில் நான் அபரிமிதமான அமைதியைக் காண்கிறேன்" என்று பிரணிதாவின் கணவர் முரளி மெய்சிலிர்க்கிறார்.
pic courtesy: TNIE
மேலும் காண்க:
PM kisan- இந்த 3 வழிமுறைகளில் e-KYC தகவல் அப்டேட் பண்ணுங்க!
மதுரை மார்க்கெட்டில் தக்காளி, மிளகாய் விலை கிடுகிடு உயர்வு- காரணம் என்ன?
Share your comments