பணம் சம்பாதிப்பது என்பது சவால்மிகுந்தது என்றே சொல்லலாம், அதிலும் கொரோனா பரவல் பலரின் வேலையைப் பறித்துக்கொண்டது. இதனால் பணம் சம்பாதிக்க தற்போது மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
அந்த வகையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துத் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார். பிரிட்டனில் விலைவாசி உயர்வு காரணமாக, நடுத்தர மக்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உதவித்தொகை கொடுத்து பணிக்கு வரவழைக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
தினசரி செலவுகள்
இந்த நிலையில் மாத சம்பளத்தைத் தாண்டி தினசரி செலவுகளைச் சமாளிக்கக் கூடுதலாகப் பணம் தேவைப்படுகிறது. இதனை சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கிய போது, லாரா யங் என்ற பெண்ணிற்கு புதிய யோசனைத் தோன்றியது. அதுதான் கணவனை வாடகைக்கு விடும் எண்ணம்.
எனது கணவர் வீட்டு வேலைக்கு உதவி செய்யத் தயார் என்று 'Hire my handy hubby' என்று விளம்பரம் செய்யத் துவங்கினார்.
குவியும் அழைப்புகள்
லாராவின் கணவர் ஜேம்ஸ் சகலகலா கில்லாடி. வீட்டில் பெட், கிட்சன், டைனிங் டேபிள் ஆகியவற்றை அடிப்படையில் இருந்து செய்து முடித்துள்ளார். மேலும் பெயின்டிங், டெக்கரேட்டிங், டைல்ஸ் பதிப்பது மற்றும் கார்பெட் அமைப்பது என வீட்டில் செய்ய வேண்டிய பெரும்பாலான பணிகள் இவருக்குத் தெரியும்.
இதனால் Rent My Handy Husband சேவை அதை அடிப்படையாக வைத்து லாரா யங் "Rent My Handy Husband" என்ற பெயரில் இணையதளம் மட்டும் அல்லாமல் பேஸ்புக் மற்றும் நெக்ஸ்ட்டோர் போன்ற செயலிகளில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரம்,ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சில நாட்களில் பிரபலம் அடைந்து தற்போது லாரா யங் மற்றும் ஜேம்ஸ் ஒரு செலிப்ரிட்டியாகவே மாறியுள்ளனர்.
ஜேம்ஸ் குறைவான கட்டணத்தை வசூலிப்பதால் அதிகப்படியான அழைப்புகள் அடுத்தடுத்து வருவதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளனர். விலைவாசி உச்சத்தைத் தொட்டு இருக்கும் இந்த வேளையில் "Rent My Handy Husband" ஐடியா பெரிய அளவில் உதவியுள்ளது இந்த பெண்ணிற்கு.
மேலும் படிக்க...
மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!
ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!
Share your comments