விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் வீணாகும் மழை நீரை பண்ணைக்குட்டைகளில் சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் பெருமளவு பாதித்துள்ளது. எனவே தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைக்குட்டைகள் அமைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விளைநிலங்களில், புதிய பண்ணைக் குட்டைகளை அமைத்தல், பழைய நீர்நிலைகளை தூர் வாருதல், புதிய நீர்நிலை ஆதாரங்களை உருவாக்குவதால், மழை நீர் சேமிக்கப்படுத்தல் போன்ற நடவடிக்கை மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். மேலும் நீர்வள துறை மழை நீர் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share your comments