1. Blogs

40% மானியதில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க அரசு அழைப்பு

KJ Staff
KJ Staff
Subsidy for Agri Machines

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக வட்டார அளவிலான வாடகை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் மேலும் 304 மையங்களை அமைக்க தமிழக அரசு ரூ.30.40 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,510 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வேளாண் இயந்திர தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகை மையங்களை வட்டார வேளாண் பொறியியல் துறையினர் அமைத்து வருகின்றனர். இது போன்ற வாடகை மையங்களை அமைக்க விரும்பும் நபர்களுக்கு அரசு 40% மானியத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை தருகிறது. இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களை மூன்று வழிகளில் பெறலாம்

  • உழவன் செயலியில், ‘மானியத் திட்டங்கள்’ எனும் பகுதியில் ‘வேளாண் இயந்திர வாடகை மையம்’ என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி விவரங்களை பெறலாம்.
  • சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை 044- 2951 5322, 2951 0822, 2951 0922 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு  விவரங்களை பெறலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Agriculture Engineering Department announced 40% subsidy for agriculture machines and equipments centre Published on: 21 November 2019, 12:09 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.