எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் என வேளாண்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரியப் படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதத்துக்கான விவசாயகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் அதன் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதில் கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க இருப்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Share your comments