விமானப் பயணம் என்பதே நம்மில் பலருக்குக் கனவாக இருக்கும். ஏனெனில், அதற்கு நாம் அதிகத் தொகையை செலவிட வேண்டியிருப்பதால், விமானப் பயணம் அரிய ஒன்றாகவேக் கருதப்படுகிறது. ஆனால் அதே டிக்கெட்டுகள் இலவசமாகக் கிடைத்தால். ஆம், 50 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளை உற்சாக வானில் மிதக்க வைத்துள்ளது.
குறைந்த விலைக்கு விமான டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த விஷயமாகும். ஆனால் உங்களுக்கு விமான டிக்கெட் இலவசமாகக் கிடைத்தால் எப்படியொரு சந்தோஷம் பெருக்கெடுக்கும். நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ள இந்த அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்க முன்வந்துள்ளது Airasia நிறுவனம்.
50 லட்சம் டிக்கெட்டுகள்
ஆமாம், இலவசமாகவே விமான டிக்கெட் வழங்குவதற்கான சலுகையை ஏர் ஏசியா (AirAsia) நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 50 லட்சம் விமான டிக்கெட்டுகளை இந்நிறுவனம் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இந்த சலுகை முடிவடைகிறது. அதற்குள் டிக்கெட் பதிவு செய்தால் இலவசமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
ஜனவரி 1ம் தேதி முதல்
இந்த சலுகையின்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்துக்கு விமான டிக்கெட்டுகளை இலவசமாக புக்கிங் செய்துகொள்ளலாம். இவ்வகையில் 50 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ் பல்வேறு நகரங்களுக்கு இலவசமாக டிக்கெட் வாங்கலாம். சர்வதேச நகரங்களுக்கும் இலவச டிக்கெட் வழங்குகிறது ஏர் ஏசியா. சுற்றுலா செல்பவர்களுக்கும் இதுவொரு அட்டகாசமான சலுகை.
கால அவகாசம்
தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பல்வேறு நகரங்கள், சுற்றுலா தலங்களுக்கு ஏர் ஏசியா இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது. இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் புக்கிங் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
அதிவேகமாக பரவும் ஃபுளூ வைரஸ் - தற்காத்து கொள்வது எப்படி?
ஓய்வூதிதாரர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு- 10 நாட்கள் மட்டுமே அவகாசம்!!
Share your comments