வெறிப்பிடிக்கும்போது, நாய்கள் மனிதர்களைத் தாக்குவதும், அவற்றால் பாதிக்கப்படும் நிலையில், மனிதர்கள் நாய்களைத் தாக்குவதும் சகஜம்தான். இருப்பினும், உயிர் என வரும்போது ஐந்தறிவு ஜீவன்கள், 6 அறிவு ஜீவன்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பதை நிரூபித்திருக்கிறார் மதுரைவாசி ஒருவர்.
ஆம்புலன்ஸ் சேவை
மதுரையில் மனிதர்களால் தாக்கப்பட்டும், விபத்தில் சிக்கியும் உயிருக்கு போராடும் தெரு நாய்கள், பூனைகள் உள்ளிட்ட சிறு பிராணிகளை காக்க மதுரை விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூர் ஹாசியா ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளாக ஜீவகாருண்ய சேவையில் ஈடுபடுகிறேன். உயிருக்கு போராடும் தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கிறேன்.
நாய் கூண்டு
நாய்களை மீட்க வாகனமின்றி சிரமப்படுவதை அறிந்ததவிட்டு சந்தை பகுதியிவ் விலங்குகள் ஆர்வலர் அசோக் பழைய வேன் ஒன்றை கொடுத்தார்.
அதை சீரமைத்து நாய் கூண்டு, முதலுதவி பெட்டி, மருத்துவ உபகரணங்களை வைத்து ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளேன்.
மாடுகளுக்கு கால்நடை துறையின் ஆம்புலன்ஸ் இருக்கும் போது, சிறு பிராணிகளுக்கும் தேவை என முயற்சி செய்து இதை அறிமுகம் செய்துள்ளேன். உடல்நலம் பாதித்த ஆதரவற்றோரையும் இந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகிறேன். இவ்வாறு சாய் மயூர் ஹாசியா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments