அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்குத் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பணிகள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இடமாற்றத்திற்கான மையத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப வணிகமாக்கல் நிர்வாகி, திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வணிகமயமாக்கல் நிர்வாகி (Technology Commercialization Executive)
காலியிடங்கள் (Vacancies)
02
கல்வித் தகுதி (Educational Qualification)
B.E / B.Tech படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.50,000
திட்ட இணை உதவியாளர் (Project Associate)
காலியிடங்கள் (Vacancies)
02
கல்வித் தகுதி (Educational Qualification)
B.E / B.Tech / MBA / MCA / M.Sc படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.40,000
திட்ட உதவியாளர் (Project Assistant)
காலியிடங்கள் (Vacancies)
02
கல்வித் தகுதி (Educational Qualification)
B.E / B.Tech / MCA / M.Com / M.Sc படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் (Salary)
ரூ.20,000
அலுவலக உதவியாளர் – ஓட்டுனர் (Office Assistant cum driver)
காலியிடங்கள் (Vacancies)
01
கல்வித் தகுதி (Educational Qualification)
-
8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
மேலும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
-
கூடுதலாக, 2 வருட பணி அனுபவமும் வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ.16,000
தேர்வு முறை (Slecetion)
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/tec%20recruitment%202021.pdf இணைய தளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களுடன் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி, (Address)
DIRECTOR, CENTRE FOR TECHNOLOGY DEVELOPMENT AND TRANSFER ANNA UNIVERSITY, CHENNAI – 600 025
கடைசித்தேதி (Deadline)
விண்ணப்பங்களை அனுப்பக் கடைசித் தேதி 25.09.2021
மேலும் படிக்க...
Share your comments