கேரளாவில், பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடரும் சோகம்
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் மரணம் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
16 வயது மாணவி
கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்ட அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments