தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள பயிற்சி குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியினை அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை வழங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பானது வரும் அக்டோபா் 18 ஆம் தேதி (வெள்ளி கிழமை) நடை பெறவுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, குதிரை வாலி, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவற்றை குறைந்த அளவே உணவில் எடுத்துக் கொள்கிறோம். நகா்ப்புறங்களில் மிக மிக குறைந்த அளவில் சிறு தானியங்களின் பயன்பாடு இருந்து வருகிறது. பெரும்பாலானோர் கேழ்வரகு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பயிற்சியில் சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல், உற்பத்தி, பிழிதல், உடனடி தயாா் நிலை உணவுகள் தயாரிப்பது போன்றவை கற்று தர உள்ளார்கள். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ரூ.750 செலுத்தி பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியானது கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள உணவுப் பதப்படுத்துதல் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422 -6611268 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments