1. Blogs

Atal Pension Yojana: மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் அனைவரும் மாத ஓய்வூதியம் பெற முடியும்!! தெரியுமா உங்களுக்கு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

நாட்டு மக்களின் தேவைகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் மிகவும் முக்கிய திட்டமாக அடல் ஓய்வூதிய திட்டம் இருந்து வருகிறது. இதன் மூலம் 60 வயதை கடந்த எந்த ஒரு இந்திய குடிமகனும் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெறமுடியும்.

அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana)

அடல் ஓய்வூதிய யோஜனா அல்லது APY ஜூன் 2015 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர், ஏழை எளியோர் அவர்களின் மாத ஓய்வூதியத்தை சேமிக்கவும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் விவசாய சமூகத்தை உள்ளடக்கிய இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அடல் ஓய்வூதிய யோஜனாவின் பயனைப் பெற முடியும். அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.

அடல் ஓய்வூதிய யோஜனா பதிவுமுறை (Atal Pension Yojana Registration Process)

  • 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்திய குடிமகனும் அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். ''Umang' App' ஆப் மூலமாகவும் தங்களை பதிவு செய்யலாம்.

  • இந்தத் திட்டத்திற்காக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் சிறிது தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும், அதன்படி ஓய்வூதியம் உங்களுக்கு வழங்கப்படும்.

மாதாந்திர பங்களிப்புத் தொகை(Monthly contribution)

  • 18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.

  • ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.

  • ரூ.210 செலுத்தி வந்திருந்தால் 60 வயதுக்குப் பின் 5000 ரூபாய் கிடைக்கும்

எந்தெந்த வயதில் அடல்ட் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், 60 வயதுக்குப் பின் கிடைக்கும் பென்ஷன் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்...

தேவையான ஆவணங்கள்

  • ஆதார் கார்டு

  • மொபைல் எண்

  • வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

 

  • ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்)

     

  • நிரந்தர இருப்பிட சான்று.

நிபந்தனைகள் (Conditions)

  • அடல்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இணையான வரிச்சலுகை உண்டு.

  • குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இத்திட்டத்தில் இருக்க வேண்டும். எனவே 40 வயதுக்கு மேல் இத்திட்டத்தில் இணைய முடியாது.

  • இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே அடல் பென்ஷன் திட்டத்திலிருந்துவிலக முடியும்.

  • திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்கு முன்பே இறந்துபோனால், அவரது வாழ்க்கைத் துணை மீதி காலத்திற்கு மாதாந்திர பங்களிப்புத் தொகையை செலுத்திவந்திருந்தாலும் அவருக்கு ஓய்வூதிய தொகை கிடைக்கும்.

  • திட்டத்தில் இணைந்தவர் இறந்துவிட்டால், அவரது வாழ்க்கைத்துணை வாழும் காலம் வரை அவரது ஓய்வூதியம் கிடைத்துவரும்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

ஓய்வூதியம் வேண்டுமா..? ரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 பெற்றிடுங்கள்!!

விவசாயிகளுக்கு ரூ.5000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் அரசு திட்டங்கள்!

English Summary: Atal Pension Yojana scheme provides pension of Rs.5000 monthly to everyone at age of 60! detail inside Published on: 18 February 2021, 05:17 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.