நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக்குச் சென்று வரிசையின் நின்று, டோக்கன் வாங்கி கேஷியரிடம் பணத்தை வாங்கி வந்ததெல்லாம் தற்போது மலையேறிப்போச்சு. அனைவரது பாக்கெட்டுகளிலும், காசுக்கு பதிலாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இருக்கும் காலம் இது. ஆனால், டெபிட் கார்டைப் பயன்படுத்தி, ஏடிஎம்மின் 4 முறைக்கு மேல் பணத்தை எடுத்தால், ஒரு முறைக்கு 173 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாடுகள்
ஏடிஎம்களில் தேவைப்படும்போது பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் இலவசமாகப் பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
ரூ.173 கட்டணம்
பொதுவாகவே நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான செய்தி ஒன்று தற்போது வைரலாகப் பரவியுள்ளது. அந்த செய்தியில் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வதந்தி
PIB சார்பாக மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு சோதனையில் இது போலியான செய்தி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி ஏடிஎம்களில் 5 முறை வரை இலவசமாகப் பணம் எடுக்கலாம் எனவும், அதைத் தாண்டினால் பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக 21 ரூபாய் வரை மட்டுமே பிடிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற போலியான செய்திகள் அதிகமாகப் பகிரப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வங்கி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
Share your comments