பிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் தனக்கு ஒரு நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இ-நாமினேசன் நடைமுறையை உடனடியாக முடித்தாக வேண்டும் என்று பிஎஃப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பிஎஃப்
நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்காலத்தில் உதவும் வகையில் அவர்களின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
விதிகளில் மாற்றம்
இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வப்போது ஈபிஎப்ஓ அமைப்பு பிஎப் முறையில் சில மாற்றங்களை அறிவிப்பது வழக்கம். அதன்படி பிஎப் கணக்குடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
நாமினி கட்டாயம்
மேலும் முக்கிய அறிவிப்பாக தற்போது பிஎஃப் சந்தாதாரர்கள் தனக்கென்று ஒரு நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை எனில் வரும் காலத்தில் பிஎப் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. சம்பளம் பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும்.
ஆன்லைனின் கூட
தற்போது ஆன்லைன் மூலம் நாமினியை நியமனம் செய்ய முடியும். அதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர் மரணத்துக்கு பிறகு பிஎஃப் தொகை மற்றும் இதர சலுகைகள் அவர் தேர்வு செய்த அந்த நாமினிக்கு கிடைக்கும். குடும்ப பென்சன் தொகையும், காப்பீட்டுத் தொகையும் அவரது குடும்பத்துக்கு கிடைக்கும்.
தற்போது பிஎஃப் சந்தாதாரருக்கு 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. எனவே பிஎஃப் சந்தாதாரர் உடனடியாக பிஎஃப் இணையபக்கத்தில் உள்ள For Employees என்ற பிரிவில் இ-நாமினேசன் பிராசஸை முடிக்க வேண்டும் என்று பிஎஃப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க...
மாத சம்பளதாரர்களுக்கு விரைவில் ரூ.81,000 - மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments