பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பான் மற்றும் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தலாம். வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் தனிப்பட்ட வரி அடையாள எண் தான் பான் கார்டு. வருமான வரி தாக்கலுக்கு மட்டுமல்லாமல் சொத்து வாங்க, நகை வாங்க, கடன் வாங்க, வங்கிக் கணக்கு தொடங்க, டீமேட் கணக்கு, மியூட்சுவல் பண்ட் முதலீடு தொடங்க என பல்வேறு செயல்பாடுகளுக்கும் அவசியமாக உள்ளது.
இந்த நிலையில் தான் மத்திய அரசு பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கியது. அதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது இறுதிக் காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது.
சரி பார்ப்பது எப்படி? (How to Check)
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status என்ற வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு சென்று, உங்களது பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது அல்லது இல்லை என்ற முடிவு தெரியவரும்.
இணையத்தை பயன்படுத்துவதில் சிரமம் இருப்போர் குறுஞ்செய்தி மூலமாகவும் என்ன நிலை என்பதை அறியலாம்.
567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண், மேலும் ஒரு இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் சேர்த்து அனுப்பினால் இணைப்பு பற்றிய விவரம் அறியலாம்.
பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் ஏப்ரல் முதல் ரூ.10,000 அபராதம் செலுத்த நேரிடும்.
மேலும் படிக்க
தேசிய பென்சன் திட்டம்: புதிய மாற்றங்கள் ஏற்படுத்த பரிந்துரை!
Share your comments