1. Blogs

சமையல் எண்ணெய்க்கு பதிலாக பீர் - மதுப்பிரியர்களுக்கு வேட்டை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Beer instead of cooking oil - hunting for alcoholics!

மதுப்பிரியர்களைப் பொருத்தவரை, அவர்களது எண்ணம் எப்போதுமே, மதுவைப் பற்றியதாகவே இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு சூப்பர் வேட்டை ஒன்று தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர் வழங்கப்படும் என ஒரு பப் அறிவித்துள்ளது.

பழங்காலத்தில் பண்டமாற்று முறை கடைப்பிடிக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பிற்காலத்தில் நாணயம் வழி பரிவர்த்தனை வந்து இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை என காலம் மாறிவிட்டது.இருப்பினும் நம்மை பண்டையக் காலத்திற்கு அழைத்துச் செல்லும் அறிவிப்பை ஒரு பப் வெளியிட்டுள்ளது. இதன்படி, சமையல் எண்ணெய் கொடுத்தால் பீர் கொடுப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

80% பங்கு

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியது. உலகின் மொத்த சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு மட்டும் 80% பங்கு உள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவானதால் சமையல் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக தற்போது ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய்க்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டருக்கு

இந்நிலையில், ஜெர்மனியில் முனிக் நகரில் உள்ள கெய்சிங்கர் பிரீவரி (Giesinger Brewery) வாடிக்கையாளர்கள் சூரியகாந்தி எண்ணெய் கொடுத்துவிட்டு பீர் வாங்கிச் செல்லலாம் என அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் கொடுத்தால் ஒரு லிட்டர் பீர் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7 யூரோ

எனினும், இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்களுக்கு லாபம்தான். ஏனெனில், ஒரு லிட்டர் பீர் விலை சுமார் 7 யூரோ. ஆனால், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை சுமார் 4.5 யூரோ மட்டுமே. எனவே, கெய்சிங்கர் பிரீவரிக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

English Summary: Beer instead of cooking oil - hunting for alcoholics! Published on: 18 July 2022, 09:36 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.