1. Blogs

2020 ஆம் ஆண்டில் பண மழை பொழிந்த சிறப்பானத் திட்டங்கள்!

KJ Staff
KJ Staff
Credit : Samayam

2020 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. அதில் பலருக்கு சேமிப்பு மற்றும் முதலீடு (Investment) தொடர்பான திட்டங்கள் இருக்கும். அதற்கு முன்னர், இந்த 2020ஆம் ஆண்டில் நல்ல லாபம் தந்த சேமிப்புத் திட்டங்கள் குறித்து இங்கு காண்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு (Mutual Fund Investment) என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியானது பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. உங்களுக்கு இப்போது 37 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களது ஓய்வு காலத்தில் அதாவது 60ஆவது வயதில் ரூ.2 கோடி வரையில் சம்பாதிக்க சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் முதலீடு செய்ய முடிந்தால் உங்களால் மிக எளிதாக அந்த இலக்கை அடைய முடியும். புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எஸ்.பி.ஐ. (SBI) முதலீடு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎஃப் (PPF) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது. பிபிஎஃப் முதலீடு மத்திய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் இது முற்றிலும் ஆபத்து இல்லாதது. பிபிஎஃப் என்பது சுயதொழில் செய்வோருக்கும் ஈபிஎஃப்ஒ-வில் இணையாத ஊழியர்களுக்கும் மிகவும் பொருத்தமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இது மட்டுமல்லாமல், வேலை அல்லது செய்யும் தொழிலின் எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பும் இல்லாதவர்கள் நீண்ட கால முதலீட்டிற்கு இந்த பிபிஎஃப் முதலீட்டைத் தேர்வு செய்யலாம்.

Credit : Samayam

தேசிய சேமிப்புத் திட்டம்

என்.பி.எஸ். (NPS) அல்லது தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தின் (National Pension Scheme) கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

முதியோர் சேமிப்புத் திட்டம்

இந்தியா போஸ்ட் செயல்படுத்தும் ஒன்பது சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று முதியோர் சேமிப்புத் திட்டமாகும். சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தபால் கிளைகளுக்கும் (Post Office) இந்த வட்டி விகிதம் பொருந்தும். இந்த முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிந்த பின்னர் சேமிப்பில் இருக்கும் தொகையானது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

Credit : Samayam

மாதாந்திர வருமானத் திட்டம்

வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானத் திட்டம் நல்ல லாபம் தருகின்றன. ஐந்தே ஆண்டுகளில் பலன் கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தைப் பொறுத்தவரையில், 2020 அக்டோபர் 1 முதல் 6.6 சதவீத வட்டி நடைமுறையில் இருக்கிறது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் (Deposit) செய்யலாம். மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சேமிக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி உள்ளே!

English Summary: Best schemes for cash flow in 2020! Published on: 25 December 2020, 08:57 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.