துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்கன்று பயம் அறியாது என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த உதாரணம்தான். எனினும், அது விஷத்தன்மையற்றப் பாம்பு என்பதால், சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
தோட்டத்தில் விளையாட்டு
மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி, வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பாம்பு அவளது உதட்டை கடித்தது. பதிலுக்கு சிறுமியும் அந்தப் பாம்பை பிடித்து கடிக்கத் துவங்கினாள்.
பலியான பாம்பு
அந்தப் பாம்பு சிறுமியிடம் இருந்து தப்பிக்க போராடியது. ஆனால், அவள் விடவில்லை. அந்தப் பாம்பை மடக்கிப் பிடித்து கடித்து துப்பி விட்டாள். பாம்பு அதே இடத்தில் உயிரிழந்தது.
மருத்துவமனையில்
சற்று நேரத்தில் வீட்டின் பின்பக்கம் வந்த குடும்பத்தினர், சிறுமி வாயில் ரத்தத்துடனும், அருகில் பாம்பு இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மருத்துவமனைக்கு சிறுமியை துாக்கிச் சென்றனர். அங்கு, அந்தச் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால், உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறினர்.
பழிக்குப்பழி
தன்னைத்தாக்க வந்தப் புலியை, முறத்தால் விரட்டிய தமிழ்ப்பெண்ணின் வீரம் பற்றிக் கேட்டறிந்த நமக்கு, தன்னைக் கடித்தப் பாம்பைப் பழிக்குப்பழியாகக் கடித்துத் துப்பிய சிறுமியும் வியப்பை ஏற்படுத்தாமல் இல்லை.இந்த சம்பவம்
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments