பெரும்பாலான கரும்பு மற்றும் மக்காசோளம் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மீதமுள்ள தோகைகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இது பற்றிய விழிப்புணா்வினை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டுமென குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாய சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடலூா் மாவட்டத்தில் மங்களுர் பகுதியில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நிகழாண்டில் மட்டும் 43 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கேற்ற பருவ நிலை நிலவியதால் இவ்வாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அறுவடை தொடங்க உள்ள நிலையில், அதற்கு பிந்தைய மண்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி. மக்காச்சோள சக்கைகளை தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தோகைகளை எரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
- மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மடிந்து விடும்.
- தோகை எரிப்பதன் மூலம் மண்ணில் உள்ள கந்தக மற்றும் தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன.
- நிலத்தில் இரும்புச் சத்து குறைபாடு அதிகரிக்கிறது.
- மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து, மகசூலும் குறைகிறது.
எனவே மக்காச்சோள விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் அதன் கழிவுகளை அதே மண்ணில் கலக்குமாறு, மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண்ணில் அங்கக சத்து பெருகி மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். மண்ணில் இருக்கும் நுண்ணுயிா்கள் அதிகரிப்பதுடன் மண்ணில் நீா் பிடிப்பு தன்மையும் அதிகரித்து மகசூல் அதிகரிக்க செய்யும் என்றனர்.
Share your comments