வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பூனையைக் காப்பாற்றிய 4 பேருக்கு தலா 10லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
உயிர் என வரும்போது, மனிதர்களானாலும் சரி, ஐந்தறிவு படைத்த ஜீவன்களாக இருந்தாலும் சரி, இரண்டையுமே ஒன்றாக பாவிக்கும் எண்ணம் நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும். அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் துபாயில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பூனையைக் காப்பாற்றியுள்ளனர்.
சுவற்றின் மீது (On the wall)
துபாயில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசிக்கிறார்கள். இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பின் 2வது மாடியின் பால்கனி சுவற்றின் மீது நடமாடிக் கொண்டிருந்த பூனை, திரும்ப வீட்டிற்குள் செல்ல முடியாமல் கீழே விழும் நிலையில் இருந்தது.
இதை அந்த குடியிருப்பில் வசித்த கேரளாவின் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த நசீர் முகமது பார்த்தார். உடனடியாக அங்கு இருந்த கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த மேலும் இருவரை அழைத்து, தன்னிடம் இருந்த ஒரு துணியை பூனை விழும் பகுதியில் வலை போல் விரித்து பிடித்தார். பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த துணியில் விழுந்தது. இதனால் அந்த பூனை காயம் ஏதுமின்றி தப்பியது.
ரூ.10 லட்சம் பரிசு (Rs.10 lakh prize)
இந்த காட்சிகளை குடியிருப்பில் வசித்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இது துபாய் முழுவதும் வைரலானது. பூனையை உயிருடன் மீட்டவர்களுக்கு பாராட்டு குவிந்தது. இவர்களது இந்த பரிவைப் பாராட்டிய துபாய் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத், பூனையை நால்வருக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.
செல்லப்பிராணிகள் (Pets)
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் மீது அளவுகடந்தப் பாசத்தை வெளிப்படுத்துவதுடன், அவற்றுக்கென பெருந்தொகையை செலவிடுவதும் உண்டு.
மேலும் படிக்க...
கொரோனாத் தடுப்பூசி போடாவிட்டால், மாதம் ரூ.15,000 கட்-அதிரடி அபராதம்
பசுமைக்கு மாறும் திருப்பதி- லட்டு பிரசாதத்திற்கு பசுமை பைகள்!
Share your comments