
நாமக்கலில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் நடை பெற உள்ளது. வரும், 13 ஆம் பயிற்சி வகுப்புகள் தொடங்க இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை தரப்படும். குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 – 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியின்போது சான்றிதழ், பயிற்சிப் பொருட்கள், மதிய உணவு மற்றும் தேநீர் போன்றவை வழங்கப் படும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 04286 – 221004, 96989 96424, 88259 08170 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
Share your comments