ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்ற சலுகையை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு (Telangana Government). ஆட்டோ, ரயில், ஏன் பறக்கும் விமானத்தில் கூட குழந்தை பிறந்திருப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் தான் தற்போது தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பேருந்தில் பிரசவம் (Childbirth ona Bus)
இருவேறு இடங்களில் பேருந்தில் பயணம் செய்த இரு தாய்மார்களுக்கு திடீரென எதிர்பாராதவிதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்து பணியாளர்களும், பொதுமக்களும் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க உதவி செய்துள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் (Ambulance) உதவியுடன் தாயும், சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிறந்தநாள் பரிசு (Birthday Gift)
ஓரு குழந்தை கடந்த மாதம் 30-ஆம் தேதி நாகர் கர்னூல் அருகே பெத்தகோதபள்ளி கிராமத்தில் பிறந்துள்ளது. மற்றொரு குழந்தை ஆசிபாபாத் அருகே சித்திபேட்டில் பிறந்துள்ளது. இவ்விரு இடங்களிலும், ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு, பிறந்தநாள் பரிசாக (Birthday Gift) தெலங்கானா அரசு சூப்பரான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், இந்த 2 பெண் குழந்தைகளும் தங்களது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சலுகை வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பேருந்து சேவைகளுக்கும் இந்த பாஸ் செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளும் தற்போது, நலமுடன் இருப்பதாக, தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
இந்திய எல்லையில் பிறந்த குழந்தை: பார்டர் என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி!
Share your comments