1. Blogs

You tube பிரசவம்- 12ம் வகுப்பு மாணவியின் சாமர்த்தியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Childbirth on YouTube - 12th grade student's skill!

யூ ட்யூப் மோகம் (You tube), இளையத் தலைமுறையினரிடையே அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. எந்த சந்தேகத்தையும் யூ ட்யூப்பில் தெரிந்து கொள்வதுடன் அதை அப்படியே நம்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இளம்பெண் துணிச்சல் (Teenage courage)

அந்த வகையில், யூ ட்யூப் உதவியுடன் தனக்குத் தானே பிரசவத்தையும் பார்த்திருக்கிறார் ஒரு துணிச்சலான இளம்பெண்.

கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தின், கூட்டக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய மாணவி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

காதலால் கர்ப்பம்

இவரின் தந்தை அருகில் உள்ள ஒரு ஊரில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் தாயார் சற்றுப் பார்வை குறைபாடு உள்ளவர். இந்த மாணவிக்கும் தன் வீட்டில் அருகில் வசித்துவந்த வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன் காரணமாக, மாணவி கர்ப்பமடைந்தார்.
விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று எண்ணி இதனைப் பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். ஆனால், மாணவி அடிக்கடி சோந்துபோனதால், பெற்றோர், அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் கூறவில்லை.

யூ டியூப் பிரசவம்

சில நாட்களில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு, பிரசவ வலி வந்தது.
இதனை யாரிடம் சொல்வது..? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மாணவி யூ டியூப்பில் ,பிரசவம் பார்ப்பது தொடர்பான வீடியோவைப் பார்த்துள்ளார். வீடியோ மூலம் தெரிந்துகொண்ட அவர் வீட்டு மாடியில் உள்ள அறை ஒன்றிற்கு சென்று கதவை உள்பக்கமாக தாழ்பாளிட்டுக் கொண்டார்.
யூ டியூப்பில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் தனக்குதானேப் பிரசவம் பார்த்து கொண்டார்.

அழுகுரலால் சிக்கினார்

இதில் அவருக்கு அழகிய ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தொப்புள் கொடியைத் தானே அறுத்துக் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, சந்தேகம் அடைந்தப் பெற்றோர், மகளை விசாரித்ததில் , நடந்தவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

போக்சோவில் கைது

இதைடுத்து, தங்கள் மகளை மஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அந்த மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில், மாணவியின் கர்ப்பத்திற்குக் காரணமான வாலிபரைப் போலீஸார், போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் படிக்க...

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்- அறிந்து கொள்ள சில டிப்ஸ்!

சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!

English Summary: Childbirth on YouTube - 12th grade student's skill! Published on: 30 October 2021, 07:32 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.