1. Blogs

வரும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இலவச நாட்டுக் கோழி மற்றும் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
country chicken camp

நாட்டுக் கோழிவளர்ப்புப் பயிற்சி

திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வரும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இலவச நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியில் பங்கு பெற விரும்பும் திருச்சி கால்நடைபல்கலைக் கழகப் பயிற்சி மையத்தினை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சியில் தரமான நாட்டுக் கோழி இனங்களை தேர்ந்தெடுத்தல் முதல் சந்தை படுத்துதல் வரை அனைத்தும் எடுத்துரைக்க உள்ளனர். குறிப்பாக முறையான பராமரிப்பு, தீவன மேலாண்மை மற்றும் வளர்ப்பு, நோய்தொற்று மற்றும் தடுப்பு முறைகள், குஞ்சுகளை பராமரித்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத்தரப்பட உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம். இல்லையெனில், பயிற்சி நடைபெறும் நாளில் அதாவது  டிசம்பர் 12ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வந்து பயிற்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Goat Farming

ஆடு வளர்ப்பு பயிற்சி

கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேனி – மதுரை ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையத்தில் நடை பெற உள்ளது. வரும் டிசம்பர் 12, 13ல் இலவச  செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் 94431 08832 என்ற அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மைய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

English Summary: Coming 12, 13 universities arrange Free Medical Camp for Country chicken and Goat Published on: 11 December 2019, 12:14 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.