தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் கடந்தாண்டு மல்லிகைக்கு மாற்றாக நட்சத்திர மல்லிகை (கோ-1) அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சியாக பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே, அவற்றை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர். அதனை அடுத்து காந்தி கிராமம் வேளாண் அறிவியல் மையம் சிறுநாயக்கன்பட்டி கிராம விவசாயிகளிடம் நட்சத்திர மல்லிகை (கோ-1) வழங்கி நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நட்சத்திர மல்லிகையின் சிறப்பு
எல்லா தட்பவெப்ப நிலையிலும் வளரக்கூடிய, ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை உடைய முறையில் இந்த மல்லி உருவாக்கப் பட்டுள்ளது. தோற்றத்தில் இளஞ்சிவப்பு, பிச்சி பூ நிறத்தில் பெரிய மொட்டுகளுடன் மிதமான நறுமண கொண்டதாக உள்ளது. மழை மற்றும் பனி காலங்களில் நம் மல்லிகைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அச்சமயங்களில் நட்சத்திர மல்லிகையை மாற்றாக பயன்படுத்தலாம்.
சாகுபடி விவரம்
நட்சத்திர மல்லிகை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 3 டன் என்ற அளவில், 1500 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஒரு செடியிலிருந்து ஆண்டொன்றுக்கு 2.21kg மலர்களை பறிக்க முடியும். ஒரு ஹெக்டருக்கு 7.41டன் நட்சத்திர மல்லி கிடைக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சாதாரண மல்லிகைக்கு பின்பற்றும் நடவு முறையையே இதற்கும் பின்பற்றப் படுகிறது. போதிய ஆலோசனைகளை காந்தி கிராமம் வேளாண் அறிவியல் மைய வல்லுனர்கள் வழங்கி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
https://tamil.krishijagran.com/horticulture/star-jasmine/
Share your comments