தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கிய இடம் வகிப்பது சிறுதானியங்கள் ஆகும். இன்று தோன்றும் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணம் நாம் நமது பாரம்பரிய உணவு வகைகளை தவிர்த்து நமக்கு பரிச்சியம் இல்லாத உணவு வகைகளை உட்கொள்ள ஆரம்பித்ததே ஆகும். இருப்பினும் இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தது வருகிறது.
சிறுதானிய தேவை அதிகரித்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் 402 ஹெக்டேரில் செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானிய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மைத் துறை, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர், வேளாண்மை இணை இயக்குநர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கின் முக்கிய அம்சமாக தமிழகத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உணவுகளில் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்தவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது.
சிறுதானியங்கள் சாகுபடிக்கு அரசு மானியங்களையும், இடுபொருள்ககளையும் வழங்கி வருகிறது. உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் சிறுதானிய செயல் விளக்கத் திடல் அமைக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கு தேவையான விதை, நுண் உரம், உயிர் உரம், உயிரியல் காரணிகள் உள்ளிட்ட இடுபொருள்களை ஹெக்டேருக்கு (ரூ.6 ஆயிரம் மதிப்பில்) வழங்கப்படுகிறது. அதேபோன்று விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகதிற்கு மானியமாக கிலோவுக்கு தலா ரூ.30 வீதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த திட்டங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிக்கலாம் என கேட்டுக் கொண்டனர்.
Share your comments