உணவு என்பது நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு விதவிதமாகச் சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். இதுத் தொன்றுதொட்டுப் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வருமானத்தைக் கெடுத்தல் (Deterioration of income)
இப்படியான வாழ்க்கையில் நாம் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும்
ஒருவர், நம் வாழ்வாதாரம் அல்லது வருமானத்தை கெடுத்துவிட்டால் அவரை நாம் சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போட்டதாகச் சொல்லி விமர்சிப்போம்.
அதாவது தன் சாப்பாட்டிற்காக மற்றொருவரின் வருமானத்தைத் கொடுத்தால், அது அவரது சாப்பாட்டைக் கெடுத்ததற்கு சமம் என்று நாம் கருதுவோம்.அதனால் அவரது சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாக விமர்சிப்போம்.
வித்தியாசமான உணவு (Different food)
ஆனால் ஒரு தீவில் உண்மையிலேயே மண்ணை அள்ளிப்போட்டு சமைத்து சாப்பிடுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பத்தான் வேண்டும். அப்படி ஒரு தீவு உண்மையிலேயே இருக்கிறது.
ஈரான் நாட்டில் உள்ள Hormuz Island என் தீவு தான் சாப்பாட்டில் மண்ணை அள்ளிப்போட்டு சமைக்கும் தீவு. இங்கு மண்ணைப்போட்டு சமைக்கும் உணவு மிக சுவையானதாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்தத் தீவு, வானவில் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
பல வண்ண மண் (Multi-coloured soil)
அதற்குக் காரணம் இங்கு இருக்கும் மண்ணின் நிறம் தான். இந்த தீவில் வெள்ளை, மஞ்சள், பச்சை, ஆரஞ்ச், பிரெளன், லைட் டார்க், தங்கம் என பல கண்கவர் வண்ணங்களில் மண் காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு மண்ணும், உணவிற்கு ஒவ்வொருச்சுவையைக் கொடுக்கிறது. அதனால் இதே நேரத்தில் இந்த மண் உணவாகவும் பயன்படுகிறது. இந்த மண் மட்டுமல்ல ஒட்டு மொத்த தீவும் உண்ணும் தன்மை கொண்டது தான்.
வைரலாகிறது
அறிவியல் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த ஒட்டு மொத்தத் தீவுமே உப்புகளில் நிறைந்தது தான். அதனால் இதை மக்கள் உணவாக பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளனர்.
உணவில் மண்ணை போட்டு சமைக்கும் இந்த தீவு குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் படிக்க...
நீண்ட வாலுடன் பிறந்த அழகிய ஆண்குழந்தை!
பாஸ்போர்ட் கவர் புக் செய்வதருக்கு வந்தது உண்மையான பாஸ்போர்ட்- ஆன்லைன் அழிச்சாட்டியம்!
Share your comments