மனிதர்களைப் பாதித்து வரும் கொரோனாத் தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதைத் தடுக்கும் வகையில், ரஷ்யாவில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிப் போடும் பணி துவங்கி உள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு (Discovery of preventive medicine)
உலக நாடுகளைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளனர்.
மக்களுக்குத் தடுப்பூசி (Vaccinate people)
இதனை தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசிச் செலுத்தும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
விலங்குகளுக்கும் கொரோனா (Corona for animals)
அதேநேரத்தில் மனிதர்களிடையே பரவி வந்த கொரோனாத் தொற்று, விலங்குகளுக்கும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.
மக்கள் ஆர்வம் (People are interested)
எனவே செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என மக்கள் அஞ்சினர். இந்நிலையில், ரஷ்யாவில் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா தடுப்பூசிப் போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மார்ச் மாதம் கண்டுபிடிப்பு (Discovery in March)
இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனாத் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழுவான ரோசல்கோஸ்னாட்ஸர், மார்ச் மாதத்தில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி உள்ளது, எனக் கூறினார்.
அளவு கடந்த பாசம் (Affection past size)
செல்லப்பிராணிகளையும், தங்கள் குடும்ப உறுப்பினர் போல் கருதுவதும், அவற்றின் பெயரில் காப்பீடு செய்து வைத்துக்கொள்வதும் வெளிநாட்டினரைப் பொருத்தவரை சகஜமான ஒன்று. குறிப்பாக ஒருசிலர் தங்கள் சொத்தில் குறிப்பிட்டப் பங்கைச் செல்லப்பிராணிகளுக்கு ஒதுக்கிவைப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!
Share your comments