இறைவனின் படைப்பில் ஐந்தறிவு மற்றும் ஆறறிவு ஜீவராசிகள், ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. இதுதான் இயற்கை வகுத்த நியதி. அந்த வகையில், ஐந்தறிவு ஜீவராசிகள் என வரும்போது, ஒன்றின் பிடியில், மற்றொன்று சிக்க நேர்ந்தால், அந்த காட்சி பிரமிப்பானதாக, திகிலூட்டுவதாகத்தானே இருக்கும். அப்படியொரு காட்சியைத் தான் இங்கு செய்தியாக்கி இருக்கிறோம்.
இரையை வளைத்து
பிரேசில் நாட்டில் கெய்மன் என்ற வகையை சேர்ந்த முதலை ஒன்றை, உருவில் மிக பெரிய பாம்பு வகையை சேர்ந்த பச்சை வண்ண அனகோண்டா ஒன்று சுற்றி, வளைத்துள்ளது. பொதுவாக, இதுபோன்ற பெரிய வகை நீண்ட பாம்புகள், இரையை வளைத்து, மூச்சு திணற செய்து உயிரிழக்க வைக்கும். அதன்பின்பே, அவற்றை உணவாக உட்கொள்ளும்.
ஆனால், இந்த முதலை சற்று பெரிய அளவில் இருந்துள்ளது.அனகோண்டாவின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அது போராடியுள்ளது. அனகோண்டாவும் பிடியை விடாமல் இருந்து உள்ளது.
தி அனகோண்டா
அனகோண்டா மற்றும் முதலைக்கு இடையே நீடித்த இந்த சண்டையை அமெரிக்கர் ஒருவர் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பைத்தான் வகை பாம்பு இது கிடையாது. போவா வகை பாம்பும் இல்லை. அவற்றை விட எல்லாம் மிக பெரியது. தி அனகோண்டா என தலைப்பிடப்பட்டுள்ளது.
550 பவுண்டு
550 பவுண்டு எடை கொண்ட பாம்பும், முதலையும் மோதி கொண்டது பற்றிய வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், இறுதியில் யார் வெற்றி பெற்றனர் என்பது பற்றிய தங்களது விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை 2.5 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்துள்ளனர். 7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.
மேலும் படிக்க...
தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!
Share your comments