லாபம் தரும் தொழில்களில் இன்று நத்தை வியாபாரம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாலும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து, புரதச்சத்து, ஒமேகா - 3, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உள்ளதாலும் உலகம் முழுவதும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
களைகட்டும் நத்தை வியாபாரம் (Weeding snail business)
தமிழகத்தில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதிகப்படியான நத்தை காணப்படுகிறது. பொதுவாக இந்த நத்தைகள் ஏரி, குளங்கள், நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும்.
மருத்துவகுணம் (Medicinal properties)
இந்நிலையில் நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், மருத்துவ குணம் கொண்ட நத்தையை பிடிக்க அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அதிராம்பட்டினம் பகுதியான மகிழங்கோட்டை, மழவேனிற்காடு,கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் நத்தை பிடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
அதிக விலை (More expensive)
கிலோ 400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நத்தை கூட்டை உடைத்து அதன் உள்ளே இருக்கும் கறி மட்டும் வேண்டுமென்றால் அது, கிலோ 600க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே தற்போது அதிராம்பட்டினத்தில் நத்தை வியாபாரம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
Share your comments