தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அவ்வப்போது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு, தீவன மேலாண்மை குறித்த தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் இலவசப் பயிற்சி முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 19, 20ம் (நாளை, மறுநாள்) தேதிகளில் பெரம்பலூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
பெரம்பலூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியினை வழங்க உள்ளது. சிறப்பம்சமாக நாட்டுக்கோழி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் காலை 10 மணிக்கு மேல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வரவை பதிவு செய்ய வேண்டும். தொடர்ப்பு கொள்ள நினைப்பவர்கள் 93853 07022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
Share your comments