1. Blogs

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dhoni is getting treatment from the treeside doctor!

உடல் நலக்குறைவு என்பது யாருக்குவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படி வந்த நோயைக் கண்டு கலங்காமல், தைரியமாக எதிர்த்துப்போராட வேண்டியதுதான் நமது கடமை.

அப்படி, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மரத்தடி மருத்துவரிடம் வைத்தியம் பார்க்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

தமது பெற்றோரின் மூட்டு வலிக்கும் இந்த மருத்துவரே சிகிச்சை அளிக்கிறார் என்பதால், பரம்பரை மருத்துவரையே நாடியிருக்கிறார் தோனி.
தனது சொந்த ஊரான ராஞ்சியில் மரத்தடியில் உள்ள ஒரு வைத்தியரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று மருந்து வாங்கி செல்கிறார்.

மூட்டு வலி

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் பொழுதை கழித்து வருகிறார். ராஞ்சியில் சில இளம் கிரிக்கெட் வீரர்களை சந்திக்க ஜேஎஸ்சிஏ மைதானத்துக்கும் அவ்வப்போது செல்கிறார்.

ஓய்வு நேரத்தில் தனது மூட்டு வலியை சரிசெய்ய ராஞ்சி கிராமத்தில் உள்ள ஒரு வைத்தியரிடம் மருந்து எடுத்து வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.தோனி தனது வீட்டிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்து வந்து மருந்தை பெற்று செல்கிறார்.

30 வருட சிகிச்சை

தோனிக்கு முன், இதே வைத்தியர் அவரது பெற்றோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் இந்த மருத்துவர். மரத்தடியில் தார்பாய் கூடாரத்தில் அமர்ந்து தோனி கடந்த ஒரு மாதமாக முழங்கால் வலிக்கு மருந்து வாங்கி வருகிறார். அவர் அமர்ந்திருக்கும் இடம் லபுங் காவல் நிலையப் பகுதியில் உள்ள கட்டிங்கேலாவில் உள்ளது.

அந்த வைத்தியரின் பெயர் வைத்திய பந்தன் சிங் கர்வார். உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு நாம் மருந்து கொடுக்கிறோம் என்பது,  பந்தன் சிங்கிற்கு தெரியாது. ஒரு நாள் காரைச் சுற்றி பல இளம் குழந்தைகள் தோனியுடன் செல்ஃபி எடுப்பதைப் பார்க்கும் வரை தோனியைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

இது குறித்து வைத்தியர் கூறியதாவது, எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண நோயாளி போல் தோனி வருகிறார். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தோனி வருவார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு சென்று விட்டது. தற்போது அவர் காரில் அமர்ந்து மருந்து சாப்பிட்டு செல்கிறார். தோனியின் முழங்கால் வலி விரைவில் குணமாகும் என நம்புகிறோன் என்று கூறினார். தோனி ஐபிஎல் 2023-ல் பங்கேற்க உள்ளார்.

மேலும் படிக்க...

பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!

10 நிமிடத்தில் மது டெலிவரி- குடிமகன்களுக்கு குஷி!

English Summary: Dhoni is getting treatment from the treeside doctor! Published on: 02 July 2022, 08:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.