எஸ்பிஐ வங்கி ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கான வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ஆதார் எண் (Aadhar), பான் கார்டு எண் (PAN card number) மட்டும் வைத்து உடனடியாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் சேமிப்புக் கணக்கு துவங்கலாம்.
டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள்
எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (Yono App) மூலம் உடனடியாக டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு திறப்பதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார், “வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே வங்கி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள் (Digital savings account) உதவுகின்றன. இதில் வங்கி சேவைகளுக்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. இதன்படி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு தொடங்கிய பின்னர் வாடிக்கையாளருக்கு ரூபே (Rupa) ஏடிஎம்/டெபிட் கார்டு அனுப்பிவைக்கப்படும்.
டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?
உங்கள் மொபைலில் யோனோ (Yono) செயலியை டவுன்லோட் செய்து பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) பாஸ்வோர்டை நிரப்பி மற்ற கூடுதல் விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
பெஹ்லா கதம், பெஹ்லி உதான்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ‘பெஹ்லா கதம்’ மற்றும் ‘பெஹ்லி உதான்’ என்ற சிறார்களுக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதியுடன் சேமிப்பு வங்கி கணக்குகளை வழங்கி வருகிறது. பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதோடு, “பணத்தை வாங்கும் சக்தியையும்” அறிந்து கொள்ள இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவிக்கிறது. இரண்டு சேமிப்பு வங்கி கணக்குகளை சிறார்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எஸ்பிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வங்கி கணக்குகளுடன் தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு ஒரு நிலையான வழிமுறையை அமைப்பதற்கான விருப்பம் இலவசமாகக் கிடைக்கிறது. சிறார்களுக்கான எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்கின் அம்சங்கள். வங்கி கணக்கில் மாத சராசரி இருப்புத்தொகை (MAB) பணம் தேவையில்லை அதிகபட்ச இருப்புத்தொகை ரூ.10 லட்சம் ஆகும். செக் புத்தக வசதி இரண்டு வகையான கணக்குகளுடன் கிடைக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!
Share your comments