கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட்டை இடுகிறது. முட்டை இட்டதும் பெண் மீன் தன்பாட்டில் சென்றுவிடும் ஆனால் சுமார் ஒரு மாத காலம் ஆண் மீன் அம்முட்டைகளை வாய்க்குள்ளேயே வைத்து தனது வாயை திறக்காமல் பாதுகாத்து வளர்க்கிறது.
குஞ்சு வெளிப்பட்ட பிறகும் இரண்டு வாரம் குஞ்சுகள் ஆண்மீனின் வாய்க்குள்ளேயே இருக்கும். மீனின் வாய்க்குள் இப்படி சுமார் ஐம்பது குஞ்சுகளுக்கு மேல் இருக்கும். இந்த ஆறு வார காலத்துக்கு தந்தை மீன் தனது குஞ்சுகளுக்காக வாயை மூடி பட்டினி கிடப்பதால் எதுவும் சாப்பிடுவதில்லை.
தாய்மையுடன் கூடிய தந்தையின் இந்தத் தியாகம் ஆச்சரியமானதே.
Krishi Jagran
Share your comments