சேமிப்பு என்பது பெருந்தொகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. சிறுதொகையைக் கூட, அதாவது தினமும் 3 ரூபாய் 50 பைசாவைக்கூட நீங்கள் சேமிக்க உதவி செய்கிறது இந்தத் திட்டம்.
கடனும் கிடைக்கும் (Credit is also available)
சேமிப்பு மட்டுமல்லாமல், ஓராண்டுக்கு சேமிப்பை நிறைவு செய்யும்பட்சத்தில், நீங்கள் செலுத்தியத் தொகையில் இருந்து கடனும் வாங்கிக்கொள்ள முடியும்.
எவ்வளவு தொகை தெரியுமா? நீங்கள் செலுத்தியதில் இருந்து 50 சதவீதத்தை.
மத்திய அரசின் திட்டம் (Central Government Plan)
அப்படியொரு அசத்தலான திட்டத்தை மத்திய அரசு நமக்காக செயல்படுத்தி வருகிறது.
இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அதுதான் சிறுசேமிக்க விரும்பும் மக்களுக்கான அஞ்சலகத்தின் சிறுசேமிப்புத் திட்டம்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் ((Post Office Recurring Deposit)
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் ((Post Office Recurring Deposit) என்பதே இந்தத் திட்டத்தின் பெயர். ஆயிரக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் சிறப்பு அம்சம்.
அஞ்சலக சிறுசேமிப்புத்திட்டம் (Postal Small Savings Scheme)
-
சீட்டு கம்பெனிகளோடு ஒப்பிடும்போது, அஞ்சலக சேமிப்பு, மிகச்சிறந்த சிறுசேமிப்பாகும். 5 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். செலுத்தும் பணத்திற்கோ பாதுகாப்பும், வட்டியும் கிடைக்கும்.
-
மாதந்தோறும் சிறியத் தொகையை செலுத்தி, பெரும் தொகையை முதிர்வுத்தொகையாகப் பெறலாம்.
தகுதி (Qualification)
தனிநபர் யாவரும் இந்தத்திட்டத்தில் டெபாசிட் செய்து சிறுசேமிப்புக் கணக்கைத் தொடங்க இயலும். யார் பெயரில் சேமிப்பு தொடங்கப்படுகிறதோ, அவரே இதனைத் தொடங்க வேண்டும். தம்பதியினர், சகோதரர்கள், நண்பர்கள் விரும்பினால் சேர்ந்து, கூட்டுக் கணக்கும் தொடங்க முடியும்.
ஏற்கனவே சேமிப்புக்கணக்கு தொடங்கியிருப்பவர்கள் விரும்பினால், தனிநபர் சேமிப்புக்கணக்கை, கூட்டு சேமிப்பாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதேபோன்று கூட்டு சேமிப்பை, எப்போது வேண்டுமானாலும், தனி சேமிப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச சேமிப்பு (Minimum Saving)
இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் சேமிக்கலாம். அதாவது தினமும் ரூ.3.50 வீதம். அதிகபட்சமாக, 10ன் மடங்காக, அதற்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்க முடியும். அதற்கு உச்ச வரம்பு கிடையாது.
வட்டி விகிதம் (Interest rate)
ஆர்டி (RD) சேமிப்பை 5 ஆண்டுகள் கட்டவேண்டியது கட்டாயம். அதைவிடக் குறைந்த வருட சேமிப்பு கிடையாது. ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிட்டு வட்டி வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி ஆண்டிற்கு 5.8 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அளிக்கப்படும் வட்டி விகிதம். ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய அரசு வட்டிவிகிதத்தை மாற்றி அறிவிக்கும்.
நிபந்தனைகள் (conditions)
மாதா மாதம் சேமிப்புத் தொகையைச் செலுத்தாவிட்டால், தவறிய தவணைத் தொகைக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக 4 தவணைகளைக் கட்டத் தவறினால், உங்கள் சேமிப்புக் கணக்கு முடக்கப்படும். ஒருவேளை அவ்வாறு முடக்கப்பட்டாலும், அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் சேமிப்புக்கணக்கைத் தொடரும் வசதியும் உண்டு.
6 மாதங்களுக்கானத் தவணைத்தொகை வரை முன்கூட்டியே செலுத்தும் வசதி உள்ளது.
கடன்வசதி (Credit facility)
இந்தத்திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு கடன்வசதியும் உண்டு. ஆனால் சேமிப்பைத் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். இந்த 12 மாதங்களும், தவணையைத் தவறாது செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம்.
நாம் சேமிக்கும் பணத்தை சரியான திட்டத்தில் செலுத்தி, அதிக முதிர்வுத்தொகையைப் பெற வேண்டும் என்பதே நம் அனைவருடைய தேடல். அதற்கு அஞ்சலக சிறுசேமிப்பு சரியானத் தேர்வு.
மேலும் படிக்க...
வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!
லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!
அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!
Share your comments