சமீப காலமாக உடுமலை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்காய் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. காலநிலை மாற்றும், அதீத உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்றவை முக்கிய காரணங்களாகும். குறைந்து வரும் மகரந்த சேர்க்கையினால் உலகம் முழுவதும் பல ஆயிரம் டன் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவும், தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம், என தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக இருந்து வருகிறது. பருவநிலை மாற்றம், நோய்த்தாக்குதல் போன்ற காரணங்களினால் மரங்களின் காய்ப்புத்திறன் வெகுவாக குறைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவின்றனர். இதனால் உண்டாகும் இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
- வருவாயினை அதிகரிக்க வெறும் தென்னை மரங்களை மட்டும் நம்பியிருக்காமல், ஊடுபயிராக காய்கறிகள், கீரைகள், தீவனப்புல், கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்யலாம்.
- தென்னை மற்றும் ஊடுபயிரில், மகசூல் அதிகரிக்க, தேனீக்கள் வளர்க்கலாம். அயல் மகரந்த சேர்க்கை பணியை தேனீக்கள் மேற்கொள்ளும் போது மகசூலுக்கு உதவியாக இருக்கிறது.
- ஏக்கருக்கு 20 பெட்டிகள் என்றளவில் வைத்து தேனீ வளர்ப்பை தொடங்கலாம். இதனால் வருவாய் மட்டுமல்லாது, சாகுபடி பயிர்களில், மகரந்த சேர்க்கை சிறப்பாக நடந்து, விளைச்சல் அதிகரிக்கும். தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைவதற்கு மகரந்த சேர்க்கை இல்லாததே முக்கிய காரணம்.
இழப்பை தவிர்க்கவும், உற்பத்தியினை பெருக்கவும் விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Share your comments